சேலம் மாவட்டம் சீலைநாயக்கன்பட்டியிலுள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்த மாடத்தியம்மாள்(53), தனது குடும்பத்துடன் தென்காசி-குருவிகுளத்திலுள்ள தங்களது குலதெய்வக் கோயிலான முத்துமாரியம்மன் கோயிலுக்கு கடந்த மார்ச் 23-ஆம் தேதி நேர்த்திக் கடன் செலுத்த சென்றுள்ளனர்.
144 தடை உத்தரவை அறியாமல் சென்ற இவர்கள், கோயில் மூடப்பட்டு இருந்ததால் திகைத்து நின்றுள்ளார். பின்னர், தங்களது உறவினரைத் தொடர்புக்கொண்டு சாத்தூர் வந்துள்ளனர்.
கையிலிருந்த பணத்தை வைத்து பத்து நாட்கள் கழித்து, செய்வதறியாது திகைத்த இவர்கள் குறித்து அக்கம்பக்கத்தினர் வாட்ஸ்-ஆப் மூலம் சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனிடம் தெரிவித்தனர்.