விருதுநகர்மாவட்டம் Sattur அருகிலுள்ள படந்தால் கிராமம் வளர்ந்து வரும் பகுதியாகும். இப்பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதைச் சுற்றியுள்ள பெரியார் நகர், வைகோ நகர், தென்றல் நகர் உள்ளிட்டப் பகுதிகளும் வளர்ந்து வரும் பகுதியாக இருந்து வருகின்றன.
இப்பகுதியில் முறையான சாலை வசதிகளும் வடிகால் வசதி மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏதும் இல்லை என்றும்; அதனைச்செய்து தரக்கோரி பஞ்சாயத்து நிர்வாகத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை செய்யப்படவில்லை என்று கூறியும் அப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாத்தூர் யூனியன் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கச் சென்றனர்.