இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கும் என சென்னை தலைமை ஹாஜி நேற்று முன்தினம் அறிவித்தார். இதனையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் தலைபிறை தென்பட்டது. இதனைத் தொடர்ந்து நோன்பு தொடங்கலாம் என பள்ளிவாசல்களில் நேற்றிரவு (ஏப்.13) அறிவிக்கப்பட்டது.
aதன்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் நோன்பிற்கான தராவீஹ் தொழுகை நடத்தினர். சாத்தூர் ஜாமியா பள்ளிவாசல் மஜ்ஜிதே நூர் பள்ளிவாசல், வெங்கடாசலபுரம், அஞ்சு மனை ஜாமியா பள்ளிவாசல் பெரிய கொல்லபட்டி உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் இரவு சிறப்பு தொழுகை நடைபெற்றது.