விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 26 பேரின் குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம் சார்பில் ஐந்து லட்ச ரூபாய் நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டது.
ஆனால் இதுவரை ஒரு குடும்பத்தினருக்கு மட்டுமே வங்கியிலிருந்து பணம் கிடைக்கப்பெற்றுள்ளது. மீதமுள்ள 25 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டது.
இதையடுத்து, நிவாரணம் வழங்குவதாகக் கூறி ஆலை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் இது தொடர்பாகப் புகார் அளித்தனர். மேலும் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுத்து நிவாரண உதவித் தொகையைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.