தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு வெடிவிபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு! - Sattur Firecracker Factory Accident deaths

விருதுநகர்: சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பெண் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து  பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை உயர்வு  பட்டாசு ஆலை வெடிவிபத்து  Sattur Firecracker Factory Accident total Death Rising 21  Sattur Firecracker Factory Accident deaths  Sattur Firecracker Factory Accident
Sattur Firecracker Factory Accident deaths

By

Published : Feb 19, 2021, 10:42 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள படந்தால் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மனைவி வைஜெயந்திமாலா (30). இவர்களுக்கு குரு தர்ஷினி (12), ஜோதிலட்சுமி (10) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வைஜெயந்திமாலா, அவரது கணவர் பேச்சிமுத்து இருவரும் அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் ஒன்றாக வேலைபார்த்து வந்துள்ளனர்.

ஆனால், பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த அன்று, பேச்சிமுத்து வேறு பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்றுள்ளார். கடந்த 12ஆம் தேதி நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில், பேச்சிமுத்துவின் மனைவி வைஜெயந்திமாலா பலத்த காயமடைந்து கடந்த ஒரு வாரமாக மதுரை இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (பிப். 18) உயிரிழந்தார். தற்போது இரண்டு பெண் குழந்தைகளுடன் பேச்சிமுத்து செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.

பட்டாசு விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்திருந்த நிலையில், வைஜெயந்திமாலா இறந்ததையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு: பெண் கழுத்தறுத்துக் கொலை!

ABOUT THE AUTHOR

...view details