தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்குவாரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவி பலி - sattur college girl drowns in quarry

சாத்தூர் அருகே கல்குவாரியில் குளிக்க சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்குவாரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவி பலி
கல்குவாரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவி பலி

By

Published : Jan 17, 2022, 10:32 AM IST

விருதுநகர் : சாத்தூர் நள்ளி கிராமத்தில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான செயல்படாத கிராவல் குவாரி உள்ளது. வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலா அவரது மகள் அபிநயா (20) அவருடன் சரிதா (21) மனோரஞ்சனி (18) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அபிநயா, சரிதா, மனோரஞ்சனி ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த கிராமத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்பொழுது அபிநயா மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சரிதா கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும், மனோரஞ்சனிக்கு நுரையீரல் பகுதியில் நீர் புகுந்ததால் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்குவாரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவி பலி

இதுகுறித்து சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: முகக்கவசம் அணியாமல் மதுபோதையில் சென்ற மாநகராட்சி ஊழியர் போலீசாருடன் கைகலப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details