பெயர்: எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்
கட்சி : அதிமுக
வயது : 46
சாத்தூர் தொகுதியை கைப்பற்றிய அதிமுக - வெற்றி பெற்றார்
விருதுநகர்: சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சீனிவாசனை வீழ்த்தி 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
sattur
ராஜவர்மன் இதற்கு முன் முள்ளிக்குளம் கிளைச்செயலாளராக இருந்தார். அதன் பின், ஆண்டாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தார். விருதுநகர் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச்செயலாளர், அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை அவைத்தலைவராகவும் இருந்தார். பின்னர், விருதுநகர் மாவட்ட கழக பொருளாளராகவும், தற்போது விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது சாத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ளார்.
Last Updated : May 23, 2019, 11:46 PM IST