தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தை அமாவாசை: விழாக்கோலம் பூண்ட சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்! - தை அமாவாசை

விருதுநகர்: தை அமாவாசையை முன்னிட்டு பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

தை அமாவாசைக்கு விழாக்கோலம் பூண்ட சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்!
தை அமாவாசைக்கு விழாக்கோலம் பூண்ட சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்!

By

Published : Jan 24, 2020, 2:37 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இது தரை மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டும்தான் பக்தர்கள், வனத்துறை சார்பில் அனுமதிக்கப்படுகின்றனர்.

தை அமாவாசைக்கு விழாக்கோலம் பூண்ட சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்!

இந்நிலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்த கோயிலின் முக்கிய திருவிழாவாக ஆடி அமாவாசை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் அதற்கு அடுத்தப்படியாக தை அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க...பாம்புகளிடமிருந்து பரவும் கொரோனா வைரஸ்?

ABOUT THE AUTHOR

...view details