விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தரையிலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் நான்கு நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை! - devotees blocked due to heavy rain
விருதுநகர்: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை போட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.
சதுரகிரி கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை
இந்நிலையில் சுமார் 850க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். ஆனால், கோயில் மலைப்பகுதியில் திடீரென மழை பெய்து வருவதால், பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாமல், அடிவாரத்திலேயே ஏமாற்றத்துடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாய் பாசத்திற்கு காலமும் தூரமும் தடை இல்லை! மகனின் உணர்ச்சி பயணம்!