தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 ஆண்டுகளைக் கடந்து பாரம்பரியமான 'சாத்தூர் சேவு'

விருதுநகா் : தீபாவளியை முன்னிட்டு விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் சேவு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தல தீபாவளியைக் கொண்டாடும் திருமண தம்பதிகளுக்கு சீர் பலகாரமாக இனிப்புகளுடன், சாத்தூர் காரச்சேவுகளையும் அதிகமானோர் வாங்கிச் செல்கின்றனர்.

sathur-sevu-spl-news100

By

Published : Oct 24, 2019, 3:49 PM IST

சென்னை - குமரி நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, சேவின் மணம், நம் நாசிகளைத் துளைத்தால், அது நிச்சயம் சாத்தூர் என்று நாம் புரிந்துகொள்ளலாம். தென் மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்கள் தின்பண்டங்களுக்குப் பெயர்பெற்று விளங்குகின்றன. அந்த வகையில் நொறுக்குத் தீனியான சேவுக்குத் தனிப் பெயர் பெற்ற ஊர் ஒன்று இருக்கிறது என்றால், அது விருதுநகா் மாவட்டத்தில் உள்ள சாத்தூர்தான். சுதந்திரப் போராட்ட காலத்தில் ’வீரப் பலகாரம்’ எனப் பாரதியார் குறிப்பிட்டவற்றில் பிரதானமானது சேவு.

முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், எம்ஜிஆா் போன்ற பல முக்கியத் தலைவர்களை சாத்தூர் காரச்சேவின் சுவை வெகுவாக ஈர்த்து இருக்கிறது. இதற்குக் காரணம் சாத்தூர் பகுதியில் ஓடும் வைப்பாறு ஆற்று நீரும், சாத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் சிகப்பு மிளகாய் வற்றலும் கொடைக்கானல் பகுதிகளிலிருந்து கிடைக்கும் மலைப்பூண்டுதான்.

காரச்சேவு வகைகளில் நயம் சேவு, நடப்பு சேவு, காரச்சேவு, சீரக சேவு, மிளகு சேவு, பட்டர் சேவு, சர்க்கரை சேவு, குச்சி சேவு, கருப்பட்டி சேவு என பல வகைகள் உள்ளன.

இது குறித்து, நான்கு தலைமுறைகளாக சேவு உற்பத்தி, விற்பனை செய்துவரும் சண்முகநாதன் கூறும்போது, சாத்தூர் காரச்சேவின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

100 ஆண்டுகளைக் கடந்து பாரம்பரியமான 'சாத்தூர் சேவு

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் சேவு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தல தீபாவளியைக் கொண்டாடும் திருமண தம்பதிக்கும் சீர் பலகாரமாக இனிப்புகளுடன், சாத்தூர் காரச் சேவுகளையும் வாங்கிச் செல்கின்றனர்.

சாத்தூர் சேவு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாநிலங்களில் உள்ள பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தீபாவளி பரிசுப் பெட்டியாக அனுப்பப்படுகிறது. மேலும் இனிப்பு வகைகளில் பழைமை மாறாத கருப்பட்டி, சீனி மிட்டாய்களும் அதிகமாக இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details