விருதுநகர் மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரி (வயது 53). இவர் கடந்த ஆண்டு தற்காலிக தூய்மைப் பணியாளராக அப்பகுதியில் பணி செய்து வந்துள்ளார். அப்போது ஆண்டு இறுதியில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காத நிலையில், ஊராட்சி செயலரிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
ஆனால் ஊராட்சி செயலர் இதற்காக சுந்தரியை பணி நீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னதாக மாவட்ட ஆட்சியருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மூன்று முறை சுந்தரி புகார் மனு அளித்துள்ள நிலையில், அந்த மனுக்களின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட போது இதுவரை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாதது தெரிய வந்தது.