விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரம் எழுந்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் (27) அதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பு என்பவரும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் சதீஷ்குமாரை சரமாரியாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
ஊராட்சித் தலைவர் பதவிக்காக வங்கி மேலாளர் கொலை - ஏழு பேர் சிறையில் அடைப்பு! - ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை
விருதுநகர்: ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேரை வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஏழாயிரம் பண்ணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோட்டைப்பட்டியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ராமசுப்பு (47), அவரது ஆதரவாளர்களான கணேசன், முத்துராஜ், சுப்புராம், ஆனந்தராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்களை சாத்தூர் நீதிமன்ற நீதிபதி சண்முகவேல்ராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்கள் ஏழு பேரையும் வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ஏழு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.