தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 11, 2020, 4:13 PM IST

Updated : Nov 11, 2020, 5:21 PM IST

ETV Bharat / state

ரூ.11.36 கோடி மதிப்பிலான 15 புதிய திட்டப்பணிகள்: முதலமைச்சர் தொடங்கிவைப்பு!

விருதுநகர்: பொதுப்பணித் துறை, குடும்ப நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகிய துறைகளின் சார்பில் 11 கோடிய 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள 15 புதிய திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.11) அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

ரூ.11.36 கோடி மதிப்பிலான 15 புதிய திட்டப்பணிகள்
ரூ.11.36 கோடி மதிப்பிலான 15 புதிய திட்டப்பணிகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகிய துறைகளின் சார்பில் 11 கோடிய 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள 15 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக் கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, போக்குவரத்துத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, முன்னாள் படை வீரர் நலத் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 28 கோடிய 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து 8 ஆயிரத்து 466 பயனாளிகளுக்கு 45 கோடிய 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பின்னர், கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இவ்வாய்வு கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா நோய்த்தடுப்புப் பணிகள் குறித்தும் அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட உயர் அலுவலர்களுடன் ஆய்வுசெய்தார்.

இதைத்தொடர்ந்து, தொழில்முனைவோர், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இவ்வாய்வு கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக செய்தது என்ன? - ஸ்டாலின் கேள்வி

Last Updated : Nov 11, 2020, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details