தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல் - சிவகாசியில் மொத்த வியாபாரிகள் இருவர் கைது - தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

விருதுநகர்: சிவகாசியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருள்களை மொத்த வியாபாரிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Rs. 50 Lakh worth Gutka seized
தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல்

By

Published : Jul 23, 2020, 10:23 AM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள்களான குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் மறைமுகமாக கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன‌.

அதன் அடிப்படையில் ‌‌‍சிவகாசியிலிருந்து செங்கமலநாச்சியார்புரம் செல்லும் சாலையில் உள்ள தண்டபாணிபுரம் காலனியில் தனியாருக்குச் சொந்தமான ஒரு கட்டடத்தில் ஏராளமான மூடைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, சிவகாசி மற்றும் திருத்தங்கல் வட்டாரத்திலுள்ள பல்வேறு கடைகளுக்கு சில்லரை விற்பனை செய்வதற்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக திருத்தங்கல் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்ட கட்டடத்தில் திடீரென காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 150க்கும் மேற்பட்ட மூட்டைகளில் குட்கா மற்றும் புகையிலை என 12 வகையான போதை பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மூட்டைகளை கைப்பற்றிய காவல்துறையினர், அங்கிருந்து பறிமுதல் செய்து திருத்தங்கல் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதன் மொத்த மதிப்பு விற்பனை விலையில் சுமார் ரூ. 50 லட்சம் வரை இருக்குமென கணக்கிடப்பட்ட நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், போதை பொருள்களை பதுக்கி வைத்து மொத்த வியாபாரிகளாக செயல்பட்டு வந்த சிவகாசியை சேர்ந்த ரமேஷ் மற்றும் சாமுவேல் ஆகிய இருவரை கைது செய்தனர்.

ரூ. 50 லட்சம் மதிப்பு போதை பொருள்கள் பறிமுதல்

இதில், சாமுவேல் மீது ஏற்கனவே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை செய்து வந்ததாக சிவகாசி வட்டார காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருத்தங்கல் காவல்துறையினர், இதுபோன்ற செயல்களில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவர் மீதும் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்த முயன்ற 600 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details