விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிவாரணம் வழங்கிய அமைச்சர்கள்
மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கும், காயம்பட்டோருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது.
நிவாரணம் வழங்கிய அமைச்சர்கள் வெம்பக்கோட்டை வட்டத்திலுள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 12இல் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வீதம் 12 லட்சம் ரூபாயும், காயமடைந்த 13 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் 13 லட்ச ரூபாயும் என 25 லட்ச ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
நிவாரணம் வழங்கிய அமைச்சர்கள்! மேலும், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் முருகனேரி கிராமத்தில் ராஜலெட்சுமி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்த ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதால் மன உளைச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாயும் என மொத்தம் 20 பேருக்கு ரூபாய் 29 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இதையும் படிங்க: பேருந்து சேவை, கோயில்கள், துணிக் கடைகள் திறப்பு.. வேறு எதற்கெல்லாம் அனுமதி?