தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சாலைப் பணிகள் நிறுத்தம் - அலுவலர்கள் ஆய்வு - National Green Tribunal a

விருதுநகர்: இராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரப் பகுதியில், விவசாயிகளுக்காக ரூபாய் நான்கு கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டு, தேசிய பசுமைப் பாதுகாப்பு தீர்ப்பாயம் உத்தரவின்பேரில் அலுவலர்கள் ஆய்வுசெய்தனர்.

inspection
inspection

By

Published : Oct 21, 2020, 2:39 PM IST

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள அய்யனார் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர்.

அதில் குறிப்பாக அய்யனார் கோயில் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய அம்மா தோப்பு மூலக்காடு, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 1914ஆம் ஆண்டு முதல் மாட்டு வண்டிகள் சென்று வரக்கூடிய அளவிற்கு மண் பாதை இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையக்கூடிய மா, தென்னை போன்ற பயிர்களை நகருக்கு எடுத்து வந்துள்ளனர்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், நபார்டு வங்கி மூலம் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 7 பாலங்கள் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் 2008ஆம் ஆண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் செய்யப்பட்டது.

தற்போது, மூன்றரை கிலோ மீட்டர் தூரம் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல், வனப் பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்பேரில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், வனத்துறை கூடுதல் வனப் பாதுகாவலர் யோகேஷ் ( IFS) அலுவலர், கார்த்திகேயன், ( IFO), மாவட்ட முதன்மை வன அலுவலர் முகமது ஷபாப் ஆகியோர் இன்று இந்தப் பகுதியை ஆய்வுசெய்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் கூறும்போது:

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்பேரில் ஆய்வு செய்துள்ளோம். ஆய்வை அடுத்து, இந்தச் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடர்வது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பு அறிவிக்கும். நாங்கள் ஆய்வினை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராமச்சந்திர ராஜா இதுகுறித்து கூறும்போது:

இந்தப் பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக வண்டிப்பாதை இருந்தது. அதை பயன்படுத்தி விவசாயம் செய்துவந்தோம். தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் இரண்டு கோடியும் நபார்டு வங்கி மூலம் இரண்டரை கோடி என மொத்தம் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 பாலங்கள் அமைக்கப்பட்ட சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

வனத்துறை அனுமதி பெறவில்லை எனக்கூறி வாய்மொழி உத்தரவாக வேலையை நிறுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறோம் என கூறினார்.

சாலை அமைப்பதற்கு தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் கண்ணனும் சாலை அமைக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால், சட்டவிரோதமாக செயல்கள் நடைபெறுவதாகக் கூறி ஒரு சிலர் தொடர்ந்த வழக்கின் காரணமாக சாலை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளும் அரசு உத்தரவு வழங்க வேண்டும் என விவசாய சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details