தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்! - Accident near Srivilliputhur

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய ஓட்டுரைக் கைதுசெய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்அருகே நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்அருகே நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

By

Published : Jul 21, 2020, 3:04 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (40). இவர் கூமாப்பட்டியிலிருந்து வத்திராயிருப்பு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், செல்லத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற உறவினர்கள் தப்பியோடிய ஓட்டுநரைக் கைது செய்யக் கோரி, செல்லத்துரையின் உடலை எடுக்க விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த செல்லத்துரை

பின்னர் அங்குவந்த காவல் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்திய பின், அவரது உறவினர்கள் உடலை எடுக்க ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து உயிரிழந்தவரின் உடல் உடற்கூறாய்வுக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மருந்தக உரிமையாளரை கத்தியால் தாக்கி பணம், செல்போன் கொள்ளை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details