விருதுநகர் :விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்ன தம்பியாபுரத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமியும் (50), பாண்டியும் (40). அக்கா, தம்பி ஆகிய இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்ள தங்களது மூத்த சகோதரரைச் சந்திக்க பெத்துரெட்டிபட்டி விலக்கில் நான்குவழிச் சாலையின் ஓரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ராமர் குடும்பத்தினர் குல தெய்வ வழிபாட்டுக்காக இருக்கன்குடி சென்று வழிபாடு முடித்துவிட்டு கன்னியாகுமரி நோக்கி வேனில் சென்றுக்கொண்டிருந்தனர். பெத்துரெட்டிபட்டி விலக்கில் நான்குவழிச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லட்சுமி, பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.