விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளியில் ஜூன் 8ஆம் தேதி கன மழை பெய்யதது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சண்முகசுந்தரவள்ளி(56), கருப்பசாமி (16), தங்கமாரியம்மாள்(45) ஆகியோர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கும் என அறிவித்திருந்தது.
மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு: குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் - மின்னல் தாக்கி மூன்று பேர் பலி
விருதுநகர்: சாத்தூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு வருவாய் துறை அமைச்சர் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.
Revenue
இந்நிலையில், இந்த நிவாரணத்தொகையை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன் நள்ளி கிராமத்திற்கு நேரில் சென்று மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணத்தொகையை வழங்கினார்.