தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா எதிரொலி - தனியார் மருத்துவமனைக்கு சீல் - விருதுநகர் கரோனா நிலவரம்

விருதுநகர்: தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா உறுதியானதால் வருவாய்த் துறையினர் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர்.

தனியார் மருத்துவமனை
தனியார் மருத்துவமனை

By

Published : Jun 30, 2020, 9:03 PM IST

Updated : Jun 30, 2020, 9:15 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர் காய்ச்சல் இருந்துவந்துள்ளது.இதையடுத்து சாத்தூர் நகர் காவல் நிலையம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிகிச்சையின்போது அவரை பரிசோதனை செய்தபோது, கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர், செவிலியர், உதவியாளர்கள், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், இரண்டு செவிலியர், ரத்த பரிசோதனை ஆய்வக உதவியாளர், உள்ளிட்ட மருத்துவமனை உதவியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தனியார் மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளித்து வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர்.

இதையும் படிங்க:தகுந்த இடைவெளியை பின்பற்றத் தவறிய நகைக் கடைக்கு சீல்!

Last Updated : Jun 30, 2020, 9:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details