விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த தூய்மை காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த 1000 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள், கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.