விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு கார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தது. பின்பு பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காரை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். மேலும் அந்த கார் யாருடையது, எங்கிருந்து வந்தது, உரிமையாளரின் விவரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.