விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செங்குளம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் நீர்ப்பாசன வசதிக்கு பயன்படுத்தும் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீர் இந்த கிராமத்தின் கிழக்குப் பகுதி குடியிருப்புக்கும் மேற்குப் பகுதி குடியிருப்புக்கும் நடுவில் அமைந்துள்ள நீரோடை வழியாகச் செல்கிறது.
அனைத்து குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் மழைநீரும் இந்த நீரோடை வழியாகவே செல்கிறது. இந்த ஓடை வழியாகத்தான் விவசாய நிலங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இந்த ஓடையை கடந்து செல்ல வேண்டும். மேலும் இந்த ஓடை முழுவதும் குப்பைகளும் புதர்களும் சூழந்து ஆங்காங்கு தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டினை உருவாக்கும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.