விருதுநகர் மாவட்டம் சாத்தூர்-சிவகாசி பிரதான சாலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு முத்தால்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வள்ளியம்மாள் (40), மகாலட்சுமி (35), ஆதி (14) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, திடீரென்று ஒரு கார் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் வந்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனையடுத்து, காரை ஓட்டி வந்த பிரேம்குமார், மூவரையும் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதில் மகாலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.