தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில் திருவிழாவில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டி

விருதுநகர்: கோவில்பட்டி அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

மாட்டு வண்டி போட்டி

By

Published : Apr 24, 2019, 11:40 PM IST

கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் அயிரவன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடத்தப்பட்டது. இதில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியை அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேசன் தொடக்கி வைத்தார். முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி போட்டியில் 12 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த போட்டியில் கடம்பூர் கருணாகராஜா மாட்டு வண்டி முதலிடத்தை பெற்றது.

நெல்லை மாவட்டம் நாலந்தா உதயம் துரைப்பாண்டி மாட்டு வண்டி 2வது இடத்தையும், ஓட்டப்பிடாரம் மேட்டூர் அழகர் பெருமாள் மாட்டு வண்டி 3வது இடத்தையும் பிடித்தன. இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாட்டு போட்டியில் 24 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 12 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், மதுரை மாவட்டம் பாண்டி கோயில் பாண்டியராஜன் மாட்டு வண்டி முதல் இடத்தையும், கடம்பூர் கருணாகராஜா மாட்டு வண்டி 2வது இடத்தையும், அயிரவன்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாட்டு வண்டி 3வது இடத்தையும் பிடித்தன. இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details