விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேவுள்ள அண்ணாநகரைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது, மகன் ஜெயராஜ் (50) ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். கரோனா தொற்று காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் ஜெயராஜ் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழிலில் மிகவும் நஷ்டம் ஏற்பட்டது.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ஜெயராஜ் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், அதற்கு வட்டிகட்ட முடியாமலும் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடன் தொல்லையால் சில நாள்கள் மன உளைச்சலில் இருந்த ஜெயராஜ் இன்று (பிப். 12) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.