விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கல்போது என்ற கிராமத்தில் தனிநபர் ஒருவரால் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிறிஸ்தவ தேவாலயம் கட்டிக் கொடுக்கப்பட்டது. இதை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (நவம்பர் 6) திறந்து வைத்தார்.
'சிறுபான்மையினருக்கு தேவையான உதவிகளை செய்ய தயார்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - சிறுபான்மையினருக்கு தேவையான உதவிகளை செய்ய தயார்
விருதுநகர்: சிறுபான்மையினருக்கு தேவையான உதவிகளை செய்ய அதிமுக அரசு தயாராக இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆலயத்துக்கு வரும் அனைவரையும் அரவணைக்கும் பண்பும் உலக மக்களுக்காக பிரார்த்திக்கும் இயல்பும் கிறிஸ்தவ மதத்தின் சிறப்பு என்றார். சித்தர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சர் என்ற முறையில் தான் எப்போதும் தயாராக இருப்பதாகவும், சிறுபான்மையினருக்கு தேவையான உதவிகளை செய்ய அதிமுக அரசும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.