தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய கட்சிகளை முன்னிருத்தி தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
மேலும் சினிமா பிரபலங்களை முன்னிறுத்தி ஆங்காங்கே பொதுமக்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் நகரின் முக்கிய சாலை ஓரங்களிலும், சுவர்களிலும் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், 'சுயநலத்திற்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மத்தியில் மக்கள் பொது நலனுக்காக அரசியல் செய்யும் ஒரே மனிதர் ரஜினிகாந்த் மட்டுமே. ரஜினிகாந்த் ஒருவரால் மட்டுமே தமிழ்நாட்டின் ஆட்சியையும், அரசியல் மாற்றத்தையும் கொண்டு வர முடியும்.
அரசியல் மாற்றம் இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது போன்ற வாசகங்கள் உள்ள போஸ்டரால் சாத்தூரில் அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.