இது தொடர்பாக விருதுநகாில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த பெருமை. முதன்மை மாநிலம் என்ற அந்தஸ்து வழங்கியதில் மத்திய அரசின் தலையீடு இல்லை, சிறந்த மாநில அந்தஸ்து பெற்றதை கேலி பேசுபவர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆட்சி மீது வஞ்சம் வைத்திருப்பவர்கள். மக்களிடம் திமுகவுக்கு நன்மதிப்பில்லை அதனால் தான் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த பல வழிகளை தேடிக்கொண்டிருக்கிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தபின் நகர்புறங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளிவரும்.
இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் அனைவரும் திமுகவை வெறுக்கின்றனர். அதிமுக மதச்சார்பற்ற கட்சி. திமுக, காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி இல்லை. அதனால் தான் மத துஷ்பிரயோகம் செய்து மலிவான அரசியல் செய்து வருகிறது. அண்டை நாடுகளாக உள்ள இஸ்லாமிய நாடுகளில் இருந்து பாதிக்கபட்டு வரும் இந்து, கிறிஸ்துவ, மற்ற அனைத்து சமுதாய மக்களை காப்பாற்றவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார்.