விருதுநகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு 593 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, விலை இல்லா ஆடு, முதியோர் ஓய்வூதியம், உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் உட்பட 1 கோடியே 31 லட்சத்து 55 ஆயிரத்து 688 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், விழாவில் பேசிய அமைச்சர் தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு உரிய பட்டா வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும், எந்த வகையான புறம்போக்கு நிலத்தில் மக்கள் வசித்து வந்தாலும் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் நீர்வழி கண்மாய் போன்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரியும் உத்தரவிட்டுள்ளார்.