தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நடிகை லதாவுடன் டூயட் பாடும் எம்ஜிஆரைத்தான் தெரியும்’ - ராஜேந்திர பாலாஜி - கேடி ராஜேந்திரபாலாஜி

விருதுநகர்: நடிகை லதாவை தூக்கிச் சென்று டூயட் பாடும் எம்ஜிஆரைத்தான் நமக்குத் தெரியும் என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

Tn vnr rajenthira balaji speech  எம்ஜிஆர் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம்  கேடி ராஜேந்திரபாலாஜி  சித்து விளையாட்டு ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திர பாலாஜி

By

Published : Jan 24, 2020, 11:45 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ‘அதிமுகவை வீழ்த்திவிடலாம் என்று நினைத்தால் எதிர்க்கட்சிகளுக்குத் தோல்வி பரிசாகக் காத்திருக்கிறது. அதிமுகவை வீழ்த்துவதற்கு இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும். நாட்டில் பிரச்னைகளை உருவாக்கும் கட்சி திமுக. யாரும் நன்றாக இருக்கக் கூடாது என்று இனச்சண்டை மதச்சண்டை எல்லாவற்றையும் தூண்டிவிட்டு அனைவரையும் சண்டை போடவைத்து அதில் திமுக குளிர் காய்கின்றது.

ராஜேந்திர பாலாஜி

ஏழைகளை உயர்த்தி விடுவதற்காக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பாடுபடுவோம்.‌ நீங்கள் எங்களுக்கு வாக்கு அளித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி உங்களுக்காக உழைக்கக் கூடியவர்கள் அதிமுகவினர்.

உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் சற்று அடங்கிப்போனோம். அதில், ஒரு சில இடங்களில் திமுகவினர் கொஞ்சம் விளையாடிப் பார்த்தனர். குத்துச் சண்டை, சிலம்பாட்டம் போன்ற பல்வேறு வித்தைகள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கற்றுவைத்துள்ளோம். கழகத்தின் கட்டுப்பாட்டிற்காக அனைவரும் ஒழுக்கமாக இருக்கிறோம். திமுகவினர் சண்டைபோட்டு வெற்றிபெற நினைத்தால் எக்காலத்திலும் அதிமுகவை வெற்றி பெற முடியாது’ என்று பேசினார்.

இதையும் படிங்க: 'பெரியார் ஒரு மின்சாரம் தொட்டால் ஷாக்கடிக்கும்' - கி.வீரமணி

ABOUT THE AUTHOR

...view details