தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து கட்சிகளும் ஒத்தைக்கு ஒத்தை போட்டு பாத்திருவோம் - சவால் விடும் அமைச்சர்! - ராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகர்: உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு, யாருக்குப் பலம் அதிகம் என்று பார்த்துவிடலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளார்.

rajendra balaji pressmeet at viruthunagar

By

Published : Nov 20, 2019, 2:49 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயப் பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ரஜினி - கமல் இணைந்தாலும் அவரது ரசிகர்கள் இணைய மாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்னைகள் உள்ளன. ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். அதிமுகதான் வெல்லும்; இரட்டை இலைதான் வெல்லும்.

ராஜேந்திர பாலாஜி பேட்டி

திமுக கூட்டணியில் பிரச்னைகள் உள்ளதால், அக்கூட்டணி விரைவில் உடையும். திருமாவளவன் கோயில் சிற்பம் குறித்து எதார்த்தமாக பேசியிருப்பார். அவர் பேச்சுக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும். அவ்வாறு போட்டியிட்டு யாருக்குப் பலம் அதிகம் என்று பார்த்துவிடலாம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட தயார். இதேபோல், அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட தயாரா; அவர்களுக்குத் திராணி உள்ளதா” என்று கேள்வியெழுப்பினார்.

இதையும் படிங்க: முதலமைச்சருடன் ஐக்கிய அரபு நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details