விருதுநகரில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "விருதுநகர் மாவட்டத்தில் இன்றுமுதல் அனைத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச மிதிவண்டி வழங்கப்படும். இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
மாணவர்கள் யாரும் இடை நிற்றல் செய்து விடக்கூடாது என எண்ணி கல்வித்துறைக்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. கல்வியில் சிறந்த மாவட்டமாக 25 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் கல்வியில் முன்னோடியாக இருக்கின்றது” என்றார்.