விருதுநகர்: ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த ஊரில் வாக்குப்பதிவு செய்தார்.
இன்று ஒரே கட்டமாக 2021ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றிவருகின்றனர்.