தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த ராஜேந்திர பாலாஜி - Rajendra Bajaji fell at the feet of Edappadi Palanisamy

உள்ளாட்சித் தேர்தலுக்காக பரப்புரைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அவரது காலில் விழுந்து வணங்கியுள்ளார்.

பழனிசாமியை வரவேற்ற ராஜேந்திர பாலாஜி
பழனிசாமியை வரவேற்ற ராஜேந்திர பாலாஜி

By

Published : Sep 24, 2021, 4:58 PM IST

Updated : Sep 24, 2021, 5:46 PM IST

விருதுநகர்:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரம்பட்டியில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

அவருக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து, ஆண்டாள் கோயில் கிளியை வழங்கினர். அப்போது, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அவருக்குத் துண்டு அணிவித்த பின்னர் நடுரோடு என்றும் பாராமல் பழனிசாமியின் காலில் விழுந்து வணங்கினார்.

பழனிசாமியை வரவேற்ற ராஜேந்திர பாலாஜி

இதுவரை மேடைகளில் மட்டுமே சில தலைவர்கள் காலில் விழுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், நடு ரோட்டில் அதிமுக தொண்டர்கள் மத்தியில், காலில் விழுந்து வணங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க:அதிமுகவினர் இடையே கோஷ்டி மோதல் - விருதுநகரில் பரபரப்பு

Last Updated : Sep 24, 2021, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details