தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜபாளையம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்: 4 பேர் மீது வழக்குப்பதிவு - virudhunagar district news in tamil

ராஜபாளையம் அருகே கோடாங்கிபட்டி பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் இரண்டு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக, நான்கு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

rajapalayam-reddiyapatti-people-clash
ராஜபாளையம் அருகே இருதரப்பினரிடையே மோதல்: 4பேர் மீது வழக்குப்பதிவு

By

Published : Apr 19, 2021, 3:19 PM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள ரெட்டியபட்டி பகுதியில் நேற்று மாலை இரண்டு இளைஞர்கள் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும், கோடங்கிபட்டி, திருவேங்கடபுரம் பகுதிகளிலிருந்து நண்பர்களை அழைத்துவந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், அப்பகுதியில் இருந்த வீட்டின் கதவு, ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், இரண்டு இருசக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையிலான காவலர்கள் இரு தரப்பினரிடமும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அடித்து நொறுக்கப்பட்ட வாகனம்

மேலும், இந்த மோதலில் ஈடுபட்ட திருவேங்கடபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜீ என்பவரது மகன் மணிகண்டன் (41), அழகு மகன் பாலமுருகன் (49), கோடங்கிபட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் கருத்தப்பாண்டி (23), பாலா மகன் கிரி (22) ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, மோதலில் ஈடுபட்ட மேலும் சிலரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

மோதலில், காயமுற்ற மணிகண்டன், கருத்தப்பாண்டி ஆகிய இருவரும் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தச் சம்பவத்தால் ரெட்டியபட்டி, வேங்கடபுரம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இதையும் படிங்க:கரோனா நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை: மருத்துவ ஊழியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details