விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகேயுள்ள கூனாங்குலம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ் (28). இவர் 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் காவலராகப் பணியில் சேர்ந்தார். ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராகப் பணியாற்றிவந்தார்.
இந்நிலையில், காளிராஜ் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த தளவாய்புரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து காளிராஜன் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.