தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கள் உண்மையுள்ள நாட்டு நாய்கள் -  உயிரை கொடுத்து நட்பு பாராட்டும் உறவுகள்...! - country dogs

மனிதர்கள் பெரும்பாலும் நன்றியோடு இருப்பதற்கு எடுத்துக்காட்டாக கூறுவது நாய்களை தான். இந்த நாய்கள் எப்போதும் உரிமையாளர்களுக்கு உண்மையாக இருந்து உயிரையும் கொடுக்கும் நிகழ்வுகளும் பல நடந்துள்ளன. அப்படிப்பட்ட நாய்களில் மிகவும் சிறப்புமிக்க ஒன்றுதான் ராஜபாளையம் நாட்டு நாய். இதுகுறித்த சிறப்பு தொகுப்பைக் காணலாம்.

rajapalayam dogs explained
rajapalayam dogs explained

By

Published : Sep 2, 2020, 8:24 PM IST

நாட்டு நாய் என்றவுடனே அனைவரின் மனதிலும் முதலில் தோன்றுவது ராஜபாளையம் நாய்களே. ஆம், இன்றளவும் தமிழ்நாட்டின் அடையாளமாக இருப்பது ராஜபாளையம் நாய்கள்தான்.

ஆனால் நாம் காக்க வேண்டியது ராஜபாளையம் நாய்களை மட்டுமல்ல, நம்மிடம் மொத்தமாக ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, முதோல் ஹவுண்ட், கரவன்கவுண்ட், புள்ளிக்குத்தா, அலங்கு போன்ற எட்டு வகை நாட்டு நாய்கள் உள்ளன. இதையே நாட்டு மக்களிடம் மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் பேசிய பிரதமர் மோடியும் சூழுரைத்தார்.

நாட்டு நாய்கள் அதீத திறன் கொண்டவை. அதிலும் தமிழ்நாட்டின் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய நாய்கள் தேசத்தின் பெருமைக்குரியது. குறைந்த பராமரிப்பு செலவும், உரிமையாளர்களிடத்தில் உண்மைத் தன்மையுடன் நடந்துகொள்ளும் திறன் இந்த நாய்களுக்கு உண்டு என்று புகழாரம் சூட்டிய அவர், அனைத்து வீடுகளிலும் இவற்றை மக்கள் பேணி வளர்க்க வேண்டும் என்று கூறினார்.

கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வரும் நாய் : வியக்கும் மக்கள்

தென் தமிழக மக்கள் பல பேர் நாட்டு நாய்களை வளர்த்து, அதன் குட்டிகளை விற்பனை செய்வதையே குடிசைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். நாய் வளர்ப்பது குடிசை தொழிலாக இருந்து வருவதற்கு மற்றொரு காரணம், ஒரு குட்டியின் விலை 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. நாட்டு நாய்கள் உரிமையாளர்களிடத்தில் நேர்மையாகவும், அவர்களுக்கு காவலாகவும், அதீத மோப்ப சக்தித் திறனுடன் இருக்கும் என்கிறார், ஆதரவற்ற நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரித்து வரும் சுனிதா கிறிஸ்டி.

தங்கள் உண்மையுள்ள நாட்டு நாய்கள்! உயிரை கொடுத்து நட்பு பாராட்டும் உறவுகள்!

நான் வளர்க்கும் சிப்பிபாறை நாய்கள், என் மிதிவண்டியுடன் மூன்று கிலோ மீட்டர் தூரம் ஓடிவரும். அதேபோல் வந்த வழியே சரியாக வீடு திரும்பிவிடும் என்று சிலிர்க்கிறார் மூன்று நாய்களை பராமரித்து வரும் மாரிமுத்து.

நம் இடத்தில், நம் சூழலில் வளரும் நாய்களை நம்மில் பல பேர் மறந்து விடுகிறோம். அதைத் தவிர்த்து, வெளிநாட்டு மோகத்தில் அங்குள்ள நாய்களை தேடி தேடி வாங்குகிறோம். உண்மை என்னவென்றால் குறைந்த செலவில், அதீத திறன் கொண்டதுதான் நாட்டு நாய்கள். அதனை மக்கள் மனதில் ஆணிபோல் பதித்திருக்கிறது பிரதமரின் உரை.

ABOUT THE AUTHOR

...view details