விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜர்புரம் குடியிருப்பு பகுதியில் தளவாய்புரத்தைச் சேர்ந்த ஐயர்சிகாமணி என்பவர் பழைய பிளாஸ்டிக் குடோன் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று திடீரென அப்பகுதியில் குப்பையில் தீ பிடித்ததை அடுத்து, அருகிலிருந்த குடோனிலும் மளமளவென தீ பரவியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து - ராஜபாளையம் குடோன் தீ விபத்து
விருதுநகர்: ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜர்புரம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து. 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

fire
இந்த விபத்தில் குடோன் முழுவதும் எரிந்து கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் திணறினர். இந்தத் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தீயணைப்புத் துறையினர், இரண்டு தீயணைப்பு வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.