விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்து வந்த நிலையில், தற்போது வெப்பச்சலனம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.