விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதுகுடியில் நேற்று முன்தினம் (செப் 14) புதிய தமிழகம் கட்சி முன்னாள் விருதுநகர் மாவட்டச் செயலாளர் ராஜலிங்கம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி, மூன்று நாட்களாக முதுகுடிப் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மூன்று நாள் சாலை மறியல்; மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தைக்குப் பின் வாபஸ் - 3 நாள் போராட்டம்
விருதுநகர்: ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் கொலை வழக்கில் மூன்று நாள் நீடித்த சாலை மறியல் போராட்டம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்குப் பின்பு வாபஸ் பெறப்பட்டது.
அதைத்தொடர்ந்து ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மூன்று நாட்களாக ராஜபாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு, ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர், மாவட்ட ஆட்சியர் கண்ணன் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உடலைப் பெற்றுக்கொண்டு, ராஜபாளையம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பேருந்துகள் இயங்கின.