தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் வெகு விமரிசையாக நடைபெற்ற புரட்டாசிப் பொங்கல் திருவிழா! - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்: ராஜபாளையம் அருகே சோலைசேரி கிராமத்தில் புரட்டாசி பொங்கல் திருவிழாவையொட்டி அரசு விதித்த கட்டுப்பாட்டுடன் வெகுவிமரிசையாக நடைபெற்ற தீமிதித்திருவிழா கொண்டாடப்பட்டது.

புரட்டாசி பொங்கல் திருவிழா!
புரட்டாசி பொங்கல் திருவிழா!

By

Published : Oct 9, 2020, 7:51 AM IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சோலைசேரி கிராமத்தில் 200 ஆண்டுகள் மிகப்பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாரியம்மன், காளியம்மன் திருக்கோயில்களின் புரட்டாசி பொங்கல் திருவிழா, ஆண்டுதோறும் பாட்டுக்கச்சேரி, கலை நிகழ்ச்சி என 8 நாள் திருவிழாவாக விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக கலை நிகழ்ச்சியின்றி அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் எளிய முறையில் கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா தொடங்கியது. திருவிழாவின் 7ஆம் நாள் திருநாளான நேற்று(அக்.08) மாரியம்மன், காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதனைத்தொடர்ந்து பிரமாண்டமாக மூன்று அடி உயத்திற்கு, பூக்குழியில் தீ வளர்க்கப்பட்டதில், விரதமிருந்து வந்த பக்தர்கள் தீ மிதித்து இறங்கினர். இதனை சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:

ஸ்டாலினை கிண்டலடித்து ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details