விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உடையனாம்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில், புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் பள்ளி மாணவ, மாணவிகள் கிராமப் பொதுமக்கள் கலந்துகொண்டு ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி - புல்வாமா தாக்குதல்
விருதுநகர்: புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அரசுப்பள்ளி மாணவர்கள், கிராமப் பொதுமக்கள் முதலாமாண்டு நினைவு அஞ்சலியை செலுத்தினர்.
![புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி virudhunagar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6073483-thumbnail-3x2-l.jpg)
virudhunagar
குறிப்பாக புல்வாமா தாக்குதலின் போது அங்கு பணியிலிருந்த உடையனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மணிகண்டன் அஞ்சலி செலுத்தினார். மேலும் இதில் திருச்சுழி தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
நினைவு அஞ்சலி செலுத்திய போது
இதையும் படிங்க:மாரடைப்பால் உயிரிழந்த ஆசிரியருக்கு மாணவர்களின் கண்ணீர் அஞ்சலி