தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கையூட்டு பெரும் போது கையும் களவுமாக சிக்கிய அரசு ஊழியர் - விசாரணையில் லஞ்ச ஒழிப்பு துறை!

விருதுநகர்: ராஜபாளையம் அருகே சார்நிலைக்கருவூல அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

public-servant-trapped-in-handcuffs-during-investigation
public-servant-trapped-in-handcuffs-during-investigation

By

Published : Mar 12, 2020, 10:25 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பாயி அம்மாள். ஓய்வு ஊதியம் வாங்கி வந்த நிலையில் இவர் தற்போது இறந்துவிட்டதையடுத்து, இவரது மகன் கார்த்திக், குடும்ப பாதுகாப்பு நிதி ரூபாய் 50,000 பெறுவதற்காக ராஜபாளையம் சார்நிலை கருவூலத்தில் பணிபுரியக்கூடிய உதவியாளர் இளங்கோவனிடம் மனு அளித்துள்ளார்‌.

மனுவை பெற்றுக்கொண்ட உதவியாளர், குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்குவதற்கு, ரூ.2000 லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக்கும் மறுப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து திரும்பியுள்ளார்.

கையூட்டு பெரும் போது கையும் களவுமாக சிக்கிய அரசு ஊழியர்

இதனையடுத்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு துறை காவலரிடத்தில் இதுகுறித்து புகாரளித்துள்ளார். புகாரின் அடைப்படையில், கார்த்திக்குடன் சென்றிருந்த லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர், கருவூல உதவியாளர் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், மேலும் கணக்கில் வராத கையூட்டு பணம் எவ்வளவு என்பது குறித்தான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கட்டடத் தொழிலாளி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!

ABOUT THE AUTHOR

...view details