விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம், சோழபுரம் பகுதிகளில் கரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் ஈடுபட்டார்.
அப்போது, அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சாலை வசதி இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக சிரமப்பட்டு வருவதாகவும் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று எங்களிடம் ஓட்டு கேட்டு வரும்போது கோரிக்கை வைத்தோம். இதுவரை நீங்கள் நிறைவேற்றவில்லை என்று கூறினர். இதையடுத்து ராஜவர்மன் டெண்டர் விடப்பட்டுள்ளது விரைவில் பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.
பின்னர், சோழபுரம் பகுதிக்குச் சென்ற அவரிடம் தங்கள் பகுதியில் வாறுகால் தூய்மை செய்யவில்லை, 'நீங்கள் வருகிறீகள், போட்டோ எடுத்து போஸ் கொடுத்துவிட்டு எந்த பணியும் செய்யவில்லை' என்று அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு பதிலளித்த ராஜவர்மன், வாறுகால் சுத்தமாக உள்ளது, அப்படி எங்காவது அடைப்பு இருந்தால் நான் இறக்கி என் கை விட்டு சுத்தம் செய்கிறேன், அடைப்பு இருக்கும் இடத்தை உங்களால் காட்ட முடியுமா? என கேட்டார். மேலும் திமுகவிற்கு ஓட்டு போட்டுவிட்டு ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக குறை சொல்லி பேசக்கூடாது என அந்நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க... சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் உதவியுடன் சொந்த ஊர் திரும்பிய குடும்பம்!