விருதுநகர்:CHILD MURDER CASE:கொடைக்கானல் அருகேவுள்ள பாய்ச்சலூர் கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்துவந்த சிறுமி பிரித்திகாவை, பள்ளி மைதானத்தில் வைத்து அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்; அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.