தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்து வரி உயர்வா அல்லது சொத்து பறிப்பா - கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி! - நிதிக்குழுவின் அறிக்கை

தமிழ்நாட்டில் திமுக அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்துவதாகக் கூறி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று (ஏப்.5) முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜி

By

Published : Apr 5, 2022, 7:59 PM IST

விருதுநகர்: மத்திய அரசின் 15ஆவது நிதிக்குழுவின் அடிப்படையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான சொத்துவரி மார்ச் 31ஆம் தேதிக்குள் உயர்த்த வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை செய்தால்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7,000 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்கும்.

அதன்படி, மத்திய அரசின் 15ஆவது நிதிக்குழுவின் அறிக்கையின்படி 25% முதல் 150% வரை பல பிரிவுகளாக சதுர அடிக்கு ஏற்ப சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என இன்று (ஏப்.5) அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆர்ப்பாட்டத்தில் பேச்சு

சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்: இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, சிவகாசியில் பாவாடி தோப்புத்திடலில் அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தலைமையில் இன்று (ஏப்.5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள சொத்துவரி மற்றும் விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம் திமுகவின் ஆட்சிதான் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சத்தமில்லாமல் உயர்ந்த வரி:ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 'தமிழ்நாட்டில் சத்தமில்லாமல் சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது சொத்து வரி உயர்வா அல்லது சொத்து பறிப்பா என்றும் வாக்களித்த மக்கள் புலம்புகிறார்கள். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த ஒரு சொத்து வரியும் உயர்த்தப்படவில்லை.

உயர்ந்த வரியை ரத்து செய்க:சிவகாசி பகுதியில் வாழும் மக்கள் பட்டாசுத் தொழில், தீப்பெட்டி தொழிலை நம்பி வசிக்கக்கூடிய மக்கள். இப்படி சொத்து வரி உயர்வை உயர்த்தினால், இவர்கள் வீட்டை விற்றுவிட்டு செல்லக் கூடிய நிலை ஏற்படும். மேலும், தற்போது பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது; இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள், தற்பொழுது நடு வீதியில் நிற்கிறார்கள்.

அடுத்ததாக பஸ் கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை விலை உயர்த்த உள்ளதாகவும் பொதுமக்கள் புலம்பி வருகிறார்கள். இந்த விலைவாசி உயர்வை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்று கூறினார்.

இதையும் படிங்க: மத்திய அரசின் அறிக்கை அடிப்படையில் சொத்து வரி உயர்வு - அமைச்சர் கே.என்.நேரு

ABOUT THE AUTHOR

...view details