தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜபாளையம் புதிய டாஸ்மாக் கடையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்! - people protest against new tasmac in rajapalayam

விருதுநகர்: ராஜபாளையம் அருகே புதிதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest against new tasmac in rajapalayam
protest against new tasmac in rajapalayam

By

Published : Oct 12, 2020, 12:48 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்கு உள்பட்ட இந்திரா நகர், லீலாவதி நகர் பகுதிகளில் புதிதாக டாஸ்மாக் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனை நிறுத்த வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் எனக் கூறி டாஸ்மாக் கடைக்கு தயார் செய்யப்படும் கட்டடத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக திறக்க இருக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம்

இந்த டாஸ்மாக் கடையால் பெண்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருக்காது. பள்ளி, வேலைக்கு செல்லும் பெண்கள் இந்தப் பாதையை கடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் இந்தப் பகுதியில் டாஸ்மாக் தேவையில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இதையும் மீறி டாஸ்மாக் திறக்கப்பட்டால் தீவிரமான போராட்டம் நடைபெறும் என்றும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்குவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க...கரோனா தொற்றை மறந்து மதுபானங்களை வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details