தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜாமியா பல்கலைக்கழகத் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திண்டுக்கல் தற்போதைய செய்தி

திண்டுக்கல்: டெல்லி ஜாமியா பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest against jamia university student attack
protest against jamia university student attack

By

Published : Feb 1, 2020, 9:36 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ஜாமிய பல்கலைக்கழகத்திலும் சிஏஏவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜாமியா பல்கலைக்கழத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நோக்கி 17 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியில் சுட்டார். இதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். காவலர்கள் அருகிலிருந்தபோதே நடைபெற்ற இந்தத் துப்பாக்கி சூடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாமியா பல்கலைக்கழகத் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இச்சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், இன்று வத்தலகுண்டு பள்ளிவாசல் எதிர்புறம் நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுகவினர் ஒன்றுதிரண்டு டெல்லி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்!

ABOUT THE AUTHOR

...view details