விருதுநகர்:அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் சங்கன். இவர் கட்டடத் தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறார். இவருடைய மனைவி அனந்தாயி (23). சங்கன் நேற்றிரவு அருகில் உள்ள உணவகத்தில் தனது மனைவி அனந்தாயிக்கு பரோட்டா வாங்கிக் கொடுத்துள்ளார்.
அந்த பரோட்டாவை வீட்டில் இருந்த கருவாட்டுக் குழம்புடன் அனந்தாயி சாப்பிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அனந்தாயி வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனையடுத்து உடனடியாக அனந்தாயியை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.